Have a Nice Day

Enjoy

அனுபவ கவிதை

என் ஊனம் பெறும்

ஒரு நாள் ஞானம்

அதுவரை இது

யாத்திரை காலம்! ! !



சொல்லெடுத்து
 
தரும் சொல்
 
சொல்வதில்லை
 
சொல்லென்று! ! !





அறைக்கு வந்த குழந்தை

அள்ளிப் போகிறது

இருளை! ! !



  
சந்திக்கும் போதெல்லாம்
 

முடிவுக்கு வருகிறது
 

பிரிவு  ! ! !

தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோயில்


இது ஒரே நேரத்தில் கட்டப்பட்ட கோயில் அல்ல. 10 ஆம் நூற்றாண்டிலேயே

இதன் சில பகுதிகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டி முதலி 

அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். 

பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக்

கோயிலைப்  புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர்.

வணங்காமுடி  மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக்

கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி 306 அடி

அளவுக்கு  மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது 13 ஆம்

நூற்றாண்டில்  கட்டப்பட்டது. ஆலயத்தின் ராஜகோபுரம் 90 அடி உயரத்தில்

ஐந்து அடுக்குகளைக் கொண்டது. ஒரு பெரிய தேரைக் குதிரைகளும்

யானைகளும்  இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றத்தில் இந்தக்

கோபுரம் அமைந்துள்ளது. 

இந்தக் கோயிலில் ஆகஸ்டு-செப்டம்பர் மற்றும் பிப்ரவரி மார்ச்


மாதங்களில்  நுழைவு வாயில் கோபுரத்தின் வழியாக மாலை நேர


வெயில் நுழைந்து  கருவறையில் இருக்கும் சிவகாமி சமேதராக


வீற்றிருக்கும் கைலாசநாதர்  சிலை மீது விழும்.
சிறப்புகள் :மாசி 9,10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு

வழியே  சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது.

இதைக்காண  அன்றைய தேதிகளில் கோயிலில் பக்தர்கள் வெள்ளம் அலை

மோதும். ரதி  சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியும் வகையிலும்,

மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் ரதி தெரியும்படியும் அமைந்த


சிற்பம் சிறப்பானது.இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம்

ஆகியவை  சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.எப்போதும் குளிர்ச்சியாக

இருக்கும்  பவளக்கல் பட்டியக்கல் நிலை கோயிலின் நுழைவாயிலில்

உள்ளது.பாதாள  லிங்கம் : இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி இது.

தலத்தின்   கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும்

இந்து பாதாள  லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய்க் கிழமை

தோறும்  அபிஷேகம் செய்தால் கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம்

மற்றும் தொழில்  விருத்தி ஆகியவை கை கூடுகின்றன. ஜூரகேஸ்வரர் :

இத்தலத்தில் உள்ள  ஜூரகேஸ்வரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது

சிறப்பு. இவருக்கு மிளகு ரசம்   வைத்து சாதம் படைத்து வடைமாலை

சாத்தி அபிஷேகம் செய்தால் காய்ச்சல் மற்றும் தீராத வியாதிகள் 

குணமடைகின்றன.

21 லட்சம் கார்களை திரும்பப் பெறும் நிஸ்ஸான்

எஞ்ஜின் கோளாறு காரணமாக 21 லட்சம் கார்களை திரும்பப் பெறுவதாக

அறிவித்துள்ளது நிஸ்ஸான் நிறுவனம்.


ஜப்பானின் முன்னணி கார் உற்பத்தியாளரான நிஸ்ஸான் உலகமெங்கும்

 தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவிலும் சென்னை 

உள்ளிட்ட மூன்று இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன.


ஆனால் இந்த நிறுவனத்தின் கார்களில் சர்வதேச அளவில்

ஆயிரக்கணக்கான புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன. 2003 முதல் 2006

வரை தயாரிக்கப்பட்ட நிஸ்ஸானின் க்யூப், மார்ச் மற்றும் டைடா ஆகிய

மாடல் கார்களில் தொடர்ந்து எஞ்ஜின் கோளாறு குறித்த புகார்கள்

வருவதாகவும், இது தொடர்பாக அந்தக் கார்களை திரும்பப் பெற

முடிவெடுத்திருப்பதாகவும் முன்பே கூறியிருந்தது.
அதன்படி, ஓடும்போதே, எஞ்ஜின் திடீரென்று நின்றுவிடுவதாக புகார்

கூறப்பட்ட 21 லட்சம் கார்களை உடனடியாகத் திரும்பப் பெறுகிறது.


இவை அனைத்தும் ஜப்பானில் விற்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

World's most Expensive car in India ! ! !

உலகிலேயே அதிக விலை கொண்ட சொகுசு கார் இந்தியாவுக்கு வருகிறது. 

காரின் பெயர் புகட்டி வேரோன் (Bugatti Veyron). விலை ரூ: 16 கோடி!!


மணிக்கு 407 கிமீ வேகத்தில் பறக்கும் இந்த கார், 2.7 வினாடிகளில் 100 கிமீ 

வேகத்துக்கு தாவிவிடும் சக்தி கொண்டது.


அதிக விலை கொண்ட சொகுசு கார்கள் இந்தியாவுக்கு புதிதல்ல.

ஏற்கெனவே  இங்கு ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லே மற்றும் மேபேக் போன்ற,

கோடிகளில் விலை கொண்ட சொகுசு கார்கள் புழக்கத்தில் உள்ளன.


அப்படியென்ன புகட்டியின் விசேஷம்?

 "புகட்டி வெறும் கார் மட்டுமல்ல... அது கார் வடிவமைப்பின் உச்சம். இந்தக் 

காரின் பெருமையை காப்பாற்ற மிகக் குறைந்த அளவு எண்ணிக்கையில் 

தான்  விற்பனைக்கு தருகிறோம்..." என்கிறார், ஐரோப்பா, மத்திய கிழக்கு

மற்றும் இந்தியாவுக்கான இந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேலாளர்

கய் காக்வெலின்.

இதன் மூலம், உலகின் மிகக் குறைந்த விலையான ரூ 1 லட்சம் மதிப்பு 

கொண்ட நானோ முதல், உலகின் அதிக விலையான ரூ 16 கோடி விலை 

கொண்ட புகட்டி வரை விதவிதமான கார்கள் விற்பனைக்குக் கிடைக்கும் 

சந்தை என்ற பெருமையை இப்போது இந்தியா பெறுகிறது.

தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. 

வரிசையாய்  விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே 

தீபாவளி ஆகும். 


தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து 

அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில 

இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற 

எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை 

எரித்துவிட வேண்டும்.





தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் 

மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும்

 சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க்

குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் 

மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை 

உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.


பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே 

பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர்.

அன்று அநேக பெண்கள் புடவையும்வேட்டியும் உடுப்பர். தீபாவளி 

அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் 

ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் 

பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி 

வாழ்த்து பெறுவர்.
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று 

சொல்வதற்கு  காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா 

இடங்களிலும்,  தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் 

அரப்பில்  சரஸ்வதியும், குங்குமத்தில்கௌரியும், சந்தனத்தில் 

பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும்"கங்கா ஸ்நானம் 

ஆச்சா" என்று  ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம்,

எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் 

"கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் 

இந்துப் பண்டிகையாய்  இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி 

அனைவரும் ஒற்றுமையாய்  கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

ஆயுத பூஜை

உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற 

இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் 

ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் 

பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனவும் சொல்லலாம்.

ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள்

வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் 

துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு 

வைத்து  பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு 

எடுத்து  தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் 

சிறப்பம்சமாகும்.


ஆயுத பூஜையன்று எல்லா ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு 

மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம்,

மற்ற அழிவு  செய்கைகளுக்கு பயன்படுத்தமாட்டோம் என்று உறுதி 

எடுத்துக் கொள்வோமே.



விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குவோர், கல்வி பயில 

ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் நன்று.


நமது பலம்

ஓரளவு வசதி படைத்த ஒருவர், தம்முடைய வீட்டை விற்று விட்டு 

அதை விட வசதியான ஒரு வீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்று

நினைத்தார். உடனே தரகரிடம் சென்று வீட்டை விற்றுத் தருமாறு

 கேட்டார். உடனே தரகர், "நானே பத்திரிகையில விளம்பரம் செய்து


வித்துத் தரேன் சார்" என்று கூறியதுடன், அழகிய வாசகங்களுடன்


பத்திரிகையில் விளம்பரம் செய்தார். அடுத்தநாள் தரகர் சுமார் பத்து

முறை வெவ்வேறு ஆட்களை அழைத்து வந்து வீட்டை சுற்றிக்

காட்டினார். வீட்டின் சொந்தக் காரருக்கு ஆச்சரியம். உடனே

 பத்திரிகையில் வெளியான விளம்பரத்தைப் பார்த்தார்.
`
அதில் குறிப்பிட்டிருந்த தன் வீட்டின் வசதிகளைப் பார்த்த அவர், 

"அடடா, நம்ம வீட்டுலயும், வீட்டைச் சுத்தியும் இவ்ளோ வசதிகள்


இருக்கா...இப்பத்தானே வீட்டோட அருமை தெரியுது" என்று

ஆச்சரியப்பட்டு, உடனே தரகரிடம் சென்றார். 

`
"வீட்டை விக்கற யோசனையை நான் கைவிட்டுட்டேன். இனி


எப்போதும் விக்கறதா இல்லை. மன்னிச்சுடுங்க" என்று சொல்லி

விட்டு வந்தார்.
`

இன்றைக்கு நம்மில் பலரும் இதே மனநிலையில் தான் இருந்து 

கொண்டிருக்கிறோம். நமது பலம் என்ன என்பது நமக்கே

தெரியவில்லை. பலவீனங்களையே நமது மனம் அதிகமாக படம்


பிடித்துக் காட்டுகிறது. அதன் காரணமாகவே வாழ்க்கையில்

சோர்ந்து போகிறோம். அறிவின் வெளிச்சத்தில் நடைபோடுகிறபோது,


இப்படிப்பட்ட சிக்கல்கள் ஏதும் ஏற்படுவதில்லை.
 `

நீதி : பலவீனங்களை மட்டும் பார்க்கலாம். நமது பலம் என்ன என்று


தெரிந்து கொள்ள வேண்டும். பலவீனங்களை சரி படுத்த முயற்சிக்க


வேண்டும்....


எந்திரன் டிப்ஸ்



1.பிரபல ஹாலிவுட் ஸ்டேன் விஸ்டம் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட 

முதல் இந்திய படம் எந்திரன்!

 

2.எந்திரன் படத்தில் மொத்தம் 22 காட்சிகள் அனிமேஷன்

செய்யப்பட்டுள்ளது.

 

3.எந்திரன் படத்தின் டெக்னிஷியங்களை தேர்ந்தெடுக்க ஒன்றை வருடம் 

எடுத்துக் கொண்டார் ஷங்கர்!

 

4.எந்திரன் படத்தில் 200 சிஜி ஷாட்கள் எடுக்கப்பட்டுள்ளன.

 

5.எந்திரன் படத்திற்கு மறைந்த எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதியுள்ளார்.
6.பாடத்தின் பாடல் காட்சிகள் இதுவரை யாரும் படம் பிடிக்காத நாடுகளான 

பிரேசில், ஆஸ்திரியா, பெரு போன்ற நாடுகளில் படமாக்கப்பட்டது.

 

7.ஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிரக் எடிட்டிங் செய்துள்ளார்.

 

8.எந்திரன் படம் சுமார் 873 நாட்களில் முடிக்கப்பட்டது.

 

9.படப்பிடிப்பின் இறுதிநாளில் எந்திரன் டீம்முக்கு சன் பிக்சர்ஸ் கலாநிதி 

மாறன் அவர்கள் விருந்து அளித்தார்.

 

10.படத்தின் ஆடியோ வெளியீட்டு உரிமையை திங் மியூசிக் நிறுவனம் 

வாங்கியுள்ளது.

11.புதிய மனிதா’ பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஏ.ஆர்.ரகுமான்


ஏ.ஆர்.ரகுமான்மகள் கதீஜா இணைந்து பாடியுள்ளனர்.


12.இந்தப் படத்தில் முதல்முறையாக கிளிமஞ்சாரோ என்ற பழங்குடியின 

பாட்டு இடம்பெற்றிருக்கிறது. எந்திரத்துக்கு காதல் வந்தால் எப்படி 

இருக்கும் என்பதற்கு டியூன் அமைத்து கலக்கியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

 
12.மேக்-அப் போடுவதற்கு மட்டும் 6 மணிநேரம் பொறுமையாக

காத்திருந்தார் ரஜினி.

 

14.'எந்திரன்', இந்தியில் 'ரோபோ' என்ற பெயரில் ரிலீசாகிறது. 

எந்திரன் - பட விமர்சனம் ! ! !

நடிப்பு                         : ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், டேனி,

                                          சந்தானம், கருணாஸ்.

சவுண்ட் மிக்சிங் :  ரசூல் பூக்குட்டி

இசை                          :  ஏ.ஆர்.ரகுமான்

எடிட்டிங்                    :  அந்தோனி

ஒளிப்பதிவு              :  ஆர்.ரத்னவேலு

பாடல்கள்               :  வைரமுத்து, பா.விஜய்

வசனம்                      :  சுஜாதா, பாலகுமாரன்

எழுத்து - இயக்கம் :  ஷங்கர்

தயாரிப்பு                    :  சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்

முதல் நாள் ஷூட்டிங்    :  15 Feb 2008

கடைசி நாள் ஷூட்டிங் :  7 July 2010

மொத்த நாட்கள்                 :  873 நாட்கள்

பாடல் வெளியீடு               :   jul 31 2010
எந்திரன்



வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம். இந்த 

சாதனைகளை முறியடிக்க இனியொரு படத்தை ரஜினியைத் தவிர 

வேறு யாராலும்  தரமுடியுமா என்ற கேள்விதான் இன்று 

கோடம்பாக்கத்தில்  பிரதானமாக  எழுந்து நிற்கிறது. டிக்கெட் 

விற்பனையில்தான் இந்தப் புதிய சாதனை.  சென்னை அபிராமி 

மெகா மாலில் 20 நிமிடங்களில் 8  நாட்களுக்கான  மொத்த 

டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. நான்கு மணி நேரத்தில் ரூ 50 

லட்சத்தை எந்திரன் வசூல் செய்திருப்பதாகவும், இது 

இந்தியத் திரையுலகில் முன்னெப்போதும் நிகழாத பெரும் சாதனை. 

தமிழகத்தின் மற்ற  திரையரங்குகளில் முன்பதிவு துவங்கிய ஒரு 

மணிநேரத்தில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன.

சுப்பிரமணிய பாரதி

சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921).

சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் பாரதியார் 

என்றும், மகாகவி என்றும்  அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர்

எழுத்தாளர்,  பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக 

சீர்திருத்தவாதி என  பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.



தேடிச் சோறுநிதந் தின்று  
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?


பாரதி - செல்லம்மா

எச்சரிக்கை! ! ! கதையல்ல. . . நிஜம் ! ! ! !

 
அவ‌னுக்கு வ‌ய‌து 22. மாநிற‌ம். . அதிர்ந்து பேச‌மாட்டான். 

மிக‌ அமைதியான‌வ‌ன்.



 

சொந்த‌ ஊர் என்ன‌வோ திருவ‌ண்ணாம‌லைதான். ஆனால் வ‌சிப்ப‌து

வ‌றுமைக்கோட்டுக்கு கீழே‌. அவ‌னுடைய‌ த‌ந்தை. தேர்ந்த‌ நெச‌வாளி. 

அவ‌ருக்கு உத‌வியாய் அவ‌ன‌து அம்மா. க‌ல்லூரி செல்லும் வ‌ய‌தில் ஒரு த‌ங்கை.


அவ‌னுடைய‌ த‌ந்தை என்ன‌மோ ஸ்ரீபெரும்புதூர் ஜாம்ப‌வான்க‌ளுக்கு 


அடிப‌ணியாத‌வ‌ர்தான். ஆனால் அவ‌ன் ப‌ணிந்துபோக‌ த‌யாராக‌யிருந்தான். 

வ‌றுமைக்கோடு. எப்பாடுப‌ட்டேனும் இந்த‌ கோட்டிலிருந்து வில‌கி த‌ன் குடும்ப‌த்தை 

ஒரு ந‌ல்ல‌ நிலைமைக்குக் கொண்டுவ‌ந்துவிட‌ வேண்டும் என்கிற‌ வெறி.


பெரும் முய‌ற்சிக்குப் பின்ன‌ர், துபாயில்  ஒரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தில் அவ‌னுக்கு 


வேலை கிடைத்த‌து. மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் ரூ.10000.



பிற‌ந்த‌து முத‌ல், அதிக‌ப‌ட்ச‌ம் இர‌ண்டு நாட்க‌ளுக்கு மேல் த‌ன் பெற்றோரை 


பிரிந்த‌தில்லை அவ‌ன். ப‌ணியில் சேர்ந்த‌ பின்  2  வருடத்துக்கு  ஒரு முறைதான் 

வீட்டுக்குப் போக‌ முடிந்த‌து. இந்த‌ பிரிவு அவ‌னை வ‌ருத்த‌ம‌டைய‌ச் செய்தாலும்,

த‌ன் குடும்ப‌ம் ந‌ல்ல‌ பொருளாதார‌ நிலைமைக்கு உய‌ர‌ இது அவ‌சிய‌ம் என்று க‌ருதி 

த‌ன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.



ப‌ண‌ம்..ப‌ண‌ம்..ப‌ண‌ம்..இது ஒன்றே முக்கிய‌ம். குடும்ப‌த்தின் வ‌றுமை ஒழிய‌ த‌ன் 


க‌வ‌ன‌ம் முழுதும் ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌திலேயே இருக்க‌ வேண்டும் என்ப‌து

அவ‌னுடைய‌ ல‌ட்சிய‌ம், வெறி, சித்தாந்த‌ம், கொள்கை, கோட்பாடு எல்லாமே. 

காலை 6:30 ம‌ணிக்கு அவ‌னுடைய‌ ஷிஃப்ட் துவ‌ங்கும். ஆறு ம‌ணிக்கு முன்னே 

அலுவ‌ல‌க‌த்துக்குச் சென்றுவிடுவான்.



 

அன்று திங்க‌ள் கிழ‌மை. ப‌னி வில‌காத‌ காலை நேர‌ம். ஆறாவ‌து த‌ள‌த்தில் உள்ள‌து 

அலுவ‌ல‌க‌ம். த‌ரைத் த‌ள‌த்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தினான். 

ஆறாம் த‌ள‌ம் சென்ற‌டைந்த‌வுட‌ன் லிஃப்ட் க‌த‌வு திற‌ந்த‌போது கீழே விழுந்த‌து 

அவ‌னுடைய‌ உயிர‌ற்ற‌ உட‌ல்!

 

அங்கிருந்த‌ செக்யூரிட்டிக‌ள் அவ‌னுடைய‌ டீமுக்கு த‌க‌வ‌ல் அளித்து அவ‌னை 

ம‌ருத்துவ‌ம‌னைக்குக் கொண்டு செல்ல‌ ஏற்பாடு செய்த‌ன‌ர். ம‌ருத்துவ‌ம‌னையில்

ப‌ரிசோதித்த‌ ம‌ருத்துவ‌ர் ம‌றுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ் நோ மோர்".

'டெட் ஆன் அரைவ‌ல்' என்று ரிப்போர்ட்டில் ப‌திவு செய்தார்.


பின்ன‌ர் அவ‌னுக்கு நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்த‌போது தெரிய‌வ‌ந்த‌து. 


அவ‌னுக்கு புகை, குடி என்று எந்த‌ ப‌ழ‌க்க‌மும் இல்லை. ஒவ்வொரு மாத‌மும் 

அவ‌னுக்கென்று ரூ.3000 எடுத்துக்கொண்டு மீதி ப‌ண‌த்தை த‌ன் குடும்ப‌த்துக்கு 

அனுப்பிவிடுவான். அந்த‌ 3500ல் போக்குவ‌ர‌த்து, அலைபேசி, உண‌வு 

ஆகிய‌வ‌ற்றிற்கான‌ செல‌வுக‌ள் அட‌ங்கும். செல‌வைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ அவ‌ன் 

மேற்கொண்ட‌ ஒரு முடிவு..தினமும் காலை உண‌வைத் த‌விர்த்து ஒரு நாளைக்கு

இரு வேளை ம‌ட்டுமே உண்ணுவ‌து.


 

இந்த‌ ப‌ழ‌க்க‌ம் வெகு நாட்க‌ளாய்த் தொட‌ர்ந்து உட‌லுக்குள் வாயு உருவாகி அது 

இத‌ய‌த்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வ‌ய‌தில் மார‌டைப்பு! இது ஏதோ

க‌ற்ப‌னையாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ வ‌ரி அல்ல‌. அவ‌னுடைய‌ உண‌வு ப‌ழ‌க்க‌த்தை அவ‌ன் 

ந‌ண்ப‌ர்க‌ள் கூற‌க்கேட்டு அறிந்த‌ பின் ம‌ருத்துவ‌ர் சொன்ன‌து.


ப‌ண‌ம் ஒன்றையே பிராத‌ன‌மாக‌க் க‌ருதி ப‌ர‌ப‌ர‌வென‌ ப‌ற‌ந்துகொண்டிருக்கும் 


இந்த‌ யுக‌த்தில், ந‌ம்மில் பெரும்பாலானோர் காலை உண‌வைத் 

த‌விர்த்துவிடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும்

கார‌ண‌ம்.."டைம் இல்ல‌". சாப்பிடுவ‌த‌ற்குக் கூட‌ நேர‌மில்லாம‌ல் 

அப்ப‌டி என்ன‌ கிழித்துவிட‌ப் போகிறோம்?


இத‌ற்கு மேல் இதைப்ப‌ற்றி நீங்க‌ளே சொல்லுங்க‌ள்!





பி.கு: நானும் இந்த‌ ம‌ட‌த்த‌ன‌மான‌ கார‌ண‌த்தைக் காட்டி ப‌ல‌ நாட்க‌ள் காலை 

உண‌வைத் த‌விர்த்திருக்கிறேன். அவ‌ன் ம‌ர‌ண‌ம்...என‌க்கொரு பாட‌ம். 

அன்றிலிருந்து என்னுடைய‌ காலை உண‌வு நேர‌ம் 9 அல்ல‌து 9:30க்குள்.

இந்திய ரூபாயின் குறியீட்டை தட்டச்சு செய்வதெப்படி?

 இந்திய ரூபாய்க்கான புதிய குறியீட்டை மக்களிடம் பிரபலப்படுத்தும் 

விதமாக குறியீடு ​வடிவில் சென்னையில் வெள்ளிக்கிழமை 

அணிவகுத்த கன்னிகாபரமேஸ்வரி  கல்லூரி மாணவிகள் ​,​​ 

கொளத்தூர் எவர்வின் மெட்ரிக் பள்ளியில் 2010 மாணவ,​​ மாணவியர் 

இந்த குறியீடு  வடிவில் பங்கேற்றனர்.


தற்போது அந்த குறியீட்டை எப்படி பயன்படுத்துவது? தற்பொழது 

அதை நம் கீ-போர்ட் மூலம் பயன்படுத்த முடியாது. அதற்கு இன்னும்

சில காலம்  பிடிக்கும். அந்த குறையை போக்கும் வகையில் 

மங்களூரை சேர்ந்த  Foradian Technologies என்ற நிறுவனம் Font 

மூலமாக அதை பயன்படுத்த ஏற்பாடு செய்து உள்ளார்கள். 

அதற்கு செய்ய வேண்டியது எல்லாம் - இந்த தளத்தில் சென்று 

Font யை தரையிறக்கம் செய்துக் கொள்ளுங்கள். பின் Control Panel 

சென்று Fonts யில் அதை Install செய்யவும்.


 

இந்த குறியீட்டை

உபயோகப்படுத்த 

MS-Wordல் சென்று 

Rupee Font யை தேர்ந்து 

எடுத்து TAB மேல் 

இருக்கும் ( ` or ~) Key

அழுத்தினால் இந்த ( ` )  

குறீயிடு நமக்கு

கிடைக்கும்.

இந்த குறியீடு 

யூனிகோடு'ல் 

சேர்க்கும் வரைக்கும்

இதை பரவலாக பயன்

படுத்த முடியாது என்பது தான் தற்போதைக்கு இதில் இருக்கும் குறை.

online font-creation tools ஐ கொண்டு உங்களுக்கான font ஐ நீங்களே 

உருவாக்கலாம் என்பது கூடுதல் தகவல்.

இந்திய ரூபாயின் புதிய குறியீடு


இந்தியாவின் நாணயம் இந்திய ரூபாய் என அழைக்கபடுகிறது. 

இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயை வெளியிடுகிறது. INR என்பது 

இந்திய  ரூபாயின் ஐஎஸ்ஓ 4217 குறியீடு. இந்தியாவில் 

பெரும்பான்மையாக ருபீ, ரூபாய், ரூபயி போன்ற பெயர்களால் 

அழைக்கப்படுகிறது, ஆனால் கிழக்கு இந்தியாவின் மேற்கு 

வங்காளம், ஒரிசா, அசாம் போன்ற மாநிலங்களில் "டாக்கா"

என்னும் சமஸ்கிருதப் பெயரிலிருந்து தோன்றிய பெயரால் 

அழைக்கப்படுகிறது.

இந்திய ரூபாய்
1000 ரூபாய் தாள் இந்தியக் காசுகள்
1000 ரூபாய் தாள் இந்தியக் காசுகள்
ISO 4217 குறியீடு INR
புழங்கும் நாடு(கள்) இந்தியாவின் கொடி இந்தியா


குறியீடு Indian Rupee symbol.svg
பைசா p
முன்னர் பாவிக்கப்பட்ட குறியீடு(கள்) Indianrupeesymbols.svg
நாணயங்கள்
அதிக பயன்பாடு 1, 2, 5, 10 ரூபாய்
அரிதான பயன்பாடு 5, 10, 25, 50 பைசா
வங்கித்தாள்கள்
அதிக பயன்பாடு 10, 20, 50, 100, 500, 1000 ரூபாய்
அரிதான பயன்பாடு 1, 2, 5 ரூபாய்
வழங்குரிமை இந்திய ரிசர்வ் வங்கி
வலைத்தளம் www.rbi.org.in
நாணயசாலை இந்திய நாணயத் தயாரிப்பகம்
வலைத்தளம் www.igmint.org

புதிய குறியீட்டை வடிவமைத்திருப்பவர், தமிழ்நாட்டைச்

சேர்ந்தவரும், பிரபல ஐஐடி தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் 

மாணவருமான டி. உதயகுமார். புதிய குறியீடு, தேவநாகரி எழுத்தான 

Ra மற்றும் ரோமன் எழுத்தான R ஆகியவற்றின் கலவையாக 

உருவாக்கப்பட்டுள்ளது.  தற்போதைய நிலையில், Rs அல்லது INR 

என்றே இந்திய ரூபாய் குறிப்பிடப்படுகிறது. இது தொடர்பாக, மத்திய 

அமைச்சரவை இன்று எடுத்த முடிவை செய்தியாளர்களிடம் 

அறிவித்தார் செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி.


``இந்தப் புதிய குறியீடு, இந்திய ரூபாயை இந்தியாவிலும் 

வெளிநாடுகளிலும் பல்வேறு மொழிகளில் ஒரே மாதிரியாகத் 

தெரியப்படுத்துவதற்கு வழிவகுக்கும். மேலும், பாகிஸ்தான், 

நேபாளம், இலங்கை, இந்தோனேஷியா போன்ற பல நாடுகள்

ரூபாய் அல்லது ரூபயா என்ற பெயரில் தங்கள் நாணயங்களை 

அழைக்கும் நிலையில்,புதிய குறியீடு இந்திய ரூபாயின் 

தனித்துவத்தை  நிலைநாட்டுவதற்கும் உதவும்’’ என்றார் அமைச்சர் 

அம்பிகா சோனி. புதிய குறியீடு, ரூபாய் நோட்டு அல்லது

நாணயங்களில் அச்சிடப்படும்  என்று தெரிவித்த அம்பிகா சோனி, 

அடுத்த 6 மாதங்களில் இந்தியாவிலும், 18 முதல் 24 மாதங்களில் 

சர்வதேச அளவிலும் புதிய குறியீட்டை அறிமுகப்படுத்தி, 

பிரபலப்படுத்துவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபடும் 

என்றும் கூறினார். புதிய குறியீட்டை அச்சில் வெளியிடவும், 

கணினிப் பயன்பாட்டுக்கு  உதவும் வகையில், கணினியின் 

விசைப்பலகையிலும், கணினி மென்பொருள்களிலும் இடம் 

பெறச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் 

அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார். 

இந்தப் புதிய குறியீட்டை வடிவமைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த

டி. உதயகுமார், பல்வேறு போட்டியாளர்களைத் தாண்டி வெற்றி 

பெற்றிருக்கிறார்.ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற போட்டியில், 

கடைசியாக ஐந்து குறியீடுகளை நிபுணர் குழு தேர்வு செய்தது. அதில் 

இறுதியாக உதயகுமாரின் குறியீடு புதிய குறியீடாகத் தேர்வு பெற்றது. 

இதற்காக உதயகுமாருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் பரிசாக

வழங்கப்பட உள்ளது.


எந்திரன் பாடல்கள் இசை வெளியீட்டு விழா துபாயில் நடக்கும்



வரும் ஆகஸ்ட் மாதம் ரஜினியின் எந்திரன் பட இசை வெளியீட்டு 

விழா நடக்கும் என செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்த ஆனந்த விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை:

‘இந்த வருடம் ரிலீஸ் நிச்சயம்!’ என்று ஷங்கர் தன் இணையதளத்தில் 

அறிவித்ததில் இருந்து… டிகிரி டிகிரியாக எகிறி வருகிறது ‘எந்திரன்’ 

ஃபீவர். ‘என்னதான் நடக்கிறது உள்ளே?’ என்று எட்டிப் பார்த்ததில் 

இருந்து…ஹீரோ, வில்லன்… இரண்டும் ரஜினியே என்பதால் டப்பிங்கின் 

போது வசன உச்சரிப்பில் வித்தியாசம் வேண்டுமே, இதனால் இரண்டு 

விதங்களில் பேசிப் பயிற்சி எடுத்து, ஒலிப்பதிவின்போது இரண்டு 

குரல்களில் பேசி அசத்தி இருக்கிறார் ரஜினி. உதவிக்குத் 

தொழில்நுட்பமும் உண்டு!

 ஃபாஸ்ட் பீட் ஒன்றைக்கொடுத்திருக்கிறார் ரஹ்மான்.

டான்ஸ் மாஸ்டர் தினேஷின் நடன 

இயக்கத்தில் செம துள்ளலும் துடிப்புமாக ஆடி இருக்கிறாராம் ரஜினி!

‘சிவாஜி’ படத்தில் ரஜினிக்கு மேக்கப் போட்ட பானுதான் ‘எந்திரன்’ 

மேக்கப் வுமனும். தவிர, ஐஸ்வர்யா ராய்க்கு மட்டுமே 57 லுக்குகளில் 

மேக்கப்பாம். யப்பா! சந்தானம், கருணாஸ் இருவரும் காமெடிக்கு 

இருக்கிறார்கள். கதைப்படி பேராசிரியர் ரஜினியின் மாணவர்கள் 

இருவரும். ரஜினி உருவாக்கும் ரோபோ ரஜினி, ஆரம்பத்தில் நல்ல 

குணங்களுடன் இருக்கும். காதல், கல்யாணப் பிக்கல் பிடுங்கல்கள் 

இருக்காது என்பதால், ரோபோ ரஜினிக்கு கல்லூரிப் பெண்கள் மத்தியில் 

செம டிமாண்ட். அலேக்காக அழகிகளை மடக்கும் ரோபோ ரஜினியைக் 

கவிழ்க்க, ‘காய்ந்துகிடக்கும்’ சந்தானம், கருணாஸ் மேற்கொள்ளும் 

முயற்சிகள்தான் காமெடிக் கதகளி. ‘நாங்க செய்ற எல்லாத்தையும் 

உன்னால செய்ய முடியாது!’ என்று ரோபோ ரஜினிக்கு இருவரும் 

சவால்விட்டு உதார்விடுவது உச்சக்கட்ட காமெடிக் குருமா!


‘எந்திரன்’ க்ளைமாக்ஸ் காட்சி பிரமாண்டத்தின் உச்சமாக இருக்குமாம். 

எண்ணூரில் அமைந்துள்ள புதிய துறைமுகத்தை நோக்கி பிரமாண்டக் 

கப்பல் ஒன்று வரும். கப்பல் முழுக்க அடுக்கப்பட்டுஇருக்கும் 

கன்டெய்னர்களில் வெடி மருந்துகள். கப்பலைச் செலுத்துவது  

வில்லனான ரோபோ ரஜினி. கப்பல், துறைமுகத்தில் மோதி வெடித்தால், 

ஒட்டுமொத்த சென்னையும் பஸ்பம் ஆகிவிடும். சென்னையை அழிக்கும் 

நோக்கத்தோடு வரும் ரோபோ ரஜினி யைத் தடுக்க, நடுக்கடலில் 

அதோடு  மோதுவார் பேராசிரியர் ரஜினி. வெடிமருந்தை 

நடுக்கடலிலேயே  பற்றவைத்து சென்னையைக் காப்பாற்றுவதுதான் 

க்ளைமாக்ஸ்!

படத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல… எக்கச்சக்க வில்லன் ரோபா 

ரஜினிக்கள் உண்டு. ரோபோ ஃபார்முலா அறிந்துகொண்டு ஏகப்பட்ட 

ரோபோ ரஜினிக்களை உருவாக்குவார் வில்லன் டேனி டெங்ஸோங்பா. 

அது தயாராகும் தொழிற்சாலைக்கே சென்று அவற்றை அடித்துத் துவம்சம் 

செய்ய வேண்டிய கடமை நல்ல ரஜினிக்கு. ஹாலிவுட் படம் ‘ஐ ரோபாட்’ 

போல முழுக்க முழுக்க அனிமேஷன் எலெக்ட்ரானிக்ஸில் எக்கச்சக்க 

ரஜினிகள் திரையில் சாகசம் செய்வார்கள்!



அழகு மட்டுமல்ல; ஐஸ்வர்யா இதில் அதிரடியும் காட்டுகிறார். கதைப்படி 

பேராசிரியர் ரஜினிக்கு கராத்தே தெரியும். ரோபோ ரஜினியிடம் இருந்து 

தப்பிக்க ஐஸ்வர்யாவுக்கு கராத்தே கற்றுத் தருவார் அவர். இதற்காக ரஜினி, 

ஐஸ்வர்யா இருவருமே 10 நாட்கள் காராத்தேவின் அடிப்படை 

வித்தைகளைக்  கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்!


‘அரசியலில் என்றைக்குமே நான் நிராயுதபாணி’, ‘வாழ்க்கை கொடுப்பவன் 

வாக்காளன்… வாய்க்கரிசி போடுறவன் வேட்பாளன்’, ‘அர்த்த சாஸ்திரம்

உங்க  வழி.. தர்ம சாஸ்திரம் என் வழி’ இவையெல்லாம் படத்தில்

ஆங்காங்கே ரஜினி  அடிக்கும் பஞ்ச் டயலாக்குகள்!
 

ஜூலை 10 அல்லது ஆகஸ்ட் 10… ‘எந்திரன்’ படத்தின் இசை வெளியீட்டு 

விழாவை நடத்தத் திட்டம். ஸ்பாட்…. அநேகமாக, துபாய்!


ரஜினியின் ஆராய்ச்சிக்கூட செட்டின் மதிப்பு ஐந்து கோடி ரூபாய்.

அலுமினிய ஷீட்டுகளால் கிழக்கு கடற் கரைச் சாலையில் பிரமாண்டமாக 

இந்த செட்டை இழைத்திருக்கிறார் கலை இயக்குநர் சாபு சிரில்!


முதல்வருக்கு பெப்ஸி நடத்திய விழாவுக்கு சென்னை வந்த 

அமிதாப், ‘எந்திரன்’ஷூட்டிங் ஸ்பாட்டில் எட்டிப்பார்த்து இருக்கிறார். 

அப்படியே அவரை ஒரு காட்சியில் நடிக்கவைத்துவிட்டார் ஷங்கர்!


‘எந்திரன்’ டப்பிங் முழுவதும் முடிந்த பின் திருப்பதி சென்று  

ஏழுமலையானுக்கு  விசேஷப் பூஜை செய்யும் திட்டத்தில் இருக்கிறார் 

ரஜினி!

எந்திரன் படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் மாதம்


சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எந்திரன்


படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் (ஜூலை) வெளியிடப்பட உள்ளன. 

இத்தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

ஆடியோ ரிலீஸ் மலேசியாவில்   நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
 

இதுகுறித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள செய்தி:
 

“சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக 

தயாரிக்கும் படம் ‘எந்திரன்’. வித்தியாசமான கதையம்சம் கொண்ட 

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகிறது.
 

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , ஐஸ்வர்யா ராய் ஜோடியாக 

நடிக்கின்றனர். இந்தி நடிகர் டேனி டெங்சொங்பா ரஜினிக்கு 

வில்லனாகநடிக்கிறார். பிரமாண்ட இயக்குனர்  ஷங்கர் இயக்குகிறார். 

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

பெரு நாடு உட்பட பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் பாடல் 


காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் மிகுந்த 

எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ள ‘எந்திரன்’ படத்தின் பாடல்கள் 

ஜூலை மாதம்  வெளியாகிறது…”