Have a Nice Day

Enjoy

ஒரு வரி . . .

என் வாழ்க்கை 

நிகழ்ச்சி நிரலில்

ஒரே ஒரு வரி

.
 

 . .

 . . .

 . . . .

. . . . .

அது உன் முகவரி !!!

ஹைக்கூ கவிதைகள்


ஏறும்விலைவாசி

எந்தக்கவலையுமின்றி

திருடும் எலிகள்!

—————————–———

கொடுத்த கடனுக்காய்

வாங்கிச் சென்றான்

மானத்தை!

——————————–——

சிரித்துச் செத்தான்
 

இடிப்பில்
 

வெடிகுண்டு

——————————–——

எங்கே ஒதுங்குவது
 

மழையில்
 

பார்வையற்றவன்!

——————————–——

குடங்களுடன் 
 
நிரம்பி வழிகிறது
 

வியர்வை!

——————————–——

என் பயணத்தில் ஒரு நாள் . . . .

அந்த வண்ணத்துப் பூச்சி

நான் பயணித்த

இரவுப் பேருந்தில் மெல்லிய

இறக்கைகளை

அசைத்த வண்ணம்

பறந்து கொண்டிருந்தது.

பறந்து பறந்து

சலித்தது போல்,

யாருடைய சட்டையிலோ

அல்லது

சேலையிலோ

ஒட்டிக்கொண்டது...

அதை  நான்

மறந்திருந்த பொழுது

மீண்டும்

பறக்க ஆரம்பித்தது.

அம்மா மடியில் இருந்த

சின்னக் குழந்தை

கையை நீட்டிப்

பிடிக்க முயன்று

தோற்று

அழுதது.

இடையில் நான்

இறங்கிக் கொண்டாலும்

அந்த வண்ணத்துப் பூச்சி

என்னவாகியிருக்குமோவென

சின்னக்கேள்வி(?)

மனதில்

ஒரு பெரிய

சுமையாய்.........

யாருடைய

பூட்ஸ் காலிலும்

நசுங்காமல்  இருந்தால் போதும்! 

- சரவணன.K

காணாமல் போனவன்

யாராவது பார்த்தீர்களா?

இரண்டு நாட்களாக காணவில்லை

அவனை

அடையாளம் தானே கேட்கிறீர்கள்!!??



தனக்கான அடையாளத்தை

தேடித் தேடித்தானே

தொலைந்து போனான்

அவன்...!



வாழ்க்கையை

அவன் வாழவில்லை

அவன் வாழ்க்கையை

அவன்

வாழ்ந்ததில்லை!!!


ஒவ்வொரு முறையும்

உயிர்த்தெழுந்ததும்

எதிர்பார்ப்புகளின் சிலுவையில்

அறையப்படுகின்றன

இவன் ஆசைகள்...!


வாழலாம் என நினைத்தபோது

எதிர்பார்ப்புகள் வாழ்ந்திருந்தது

அவன்

நிகழ்காலத்தை!!??


சாவிற்கு பயப்படாத அவன்

வாழ்க்கை..

சாவதற்கு பயந்து

செத்து செத்து வாழ்ந்தது...!!


அவ்வப்போது

நிராகரிப்பும்

அலட்சியங்களும்

கருகலைப்பு செய்கின்றன

இவன் அடையாளங்களை...!!


கருகலைப்பு செய்யப்பட்டதில்

வழிந்த இரத்தத்தை

தானே துடைத்துக் கொண்டிருப்பான்

மெளனம் கொண்டு!!!

யாராவது பார்த்தால் சொல்லுங்களேன்.


- சரவணன.K

அவசர அவசரமாக எழுதாத கவிதை

கிறுக்கலாய் படுகிறது

எல்லாமே

தோளில் சாய்ந்தபடி

நெஞ்சில் நீ எழுதிய

கவிதைக்கு பிறகு
-------------------------------------------
யாரையோ தேடுவதாய்

தேடிப் பிடிக்கின்றன உன் விழிகள்

நான் பார்ப்பதை
--------------------------------------------------
உன் பாரங்களோடு

என் மீது சாய்கிறாய்

மிதக்கிறேன் நான்
--------------------------------------------------
பார்க்காத தருணத்தில்

பார்த்துவிட படபடக்கிறது

உன் கண்கள்


உன் பார்வையை

கவ்விவிட காத்திருக்கிறது

என் கண்கள்

இரண்டிற்குமாய்

ஏங்கித் துடிக்கிறது என் இதயம்

யாருக்கும் தெரியாமல்

சந்தித்துக் கொண்ட நம் பார்வைகளை

காட்டிக்கொடுக்கிறது

உன் வெட்கம்

- சரவணன.K

"காதல்னா என்ன . . . . ?" பிரபலங்களின் பரபரப்பு பேட்டி ! ! !

"காதல்னா என்ன ....?" என்ற ஹைதர்அலி காலத்து கேள்வியை நமது

கோடம்பாக்கத்து பிரபல ஆட்களிடம் கேட்டோம்....

நகரம் பரபரப்பாக ஆரம்பிக்கும் காலை பொழுது, நாம் சூப்பர் ஸ்டார் ரஜினி

வீட்டில் ஆஜர். வரவேற்பரையில் காத்திருக்கிறோம், ரஜினி "ஜி"யிடம்

( பாபாவிற்குப்பிறகு ரஜினி 'பாபாஜி'யை இப்படித்தான் அழைக்கிறாராம் )

பிரார்த்தனை பண்ணிகொண்டிருப்பதாக சொன்னார்கள். தனக்கேயுரிய ஏற்ற

இறக்கங்களுடன் சொல்கிறார்...

"நல்லா கேட்டீங்க...

நச்சுன்னு கேட்டீங்க...

சூப்பரா கேட்டீங்க...



கண்ணா....


காதல்ங்கறது நதி நீர் இணைப்பு மாதிரி....

இழுக்கவும் முடியாது...

முடிக்கவும் முடியாது...

அப்பறம் ஏண்டா ஆரம்பிச்சோம்னு இருக்கும்.


நான் சொல்றத சொல்லிட்டேன்...

இல்ல நான் காதலிச்சே தீருவேன்னா...

என் பாக்கெட்லேர்ந்து ஒரு வெத்து பேப்பர் எடுத்து கொடுக்குறேன்...

லவ் லெட்டர் எழுதி டெவலப் பண்ணிக்கோ.


இது எப்படி இருக்கு?... ஹா . ஹா . . ஹ . . .
___________________________________________________________________________________________________________

ஆரவரமில்லாத உலக நாயகன் கமல் வீடு. கேள்வியை முன் வைத்ததும்

காரணமின்றி சிறிது நேரம் நம்மை முறைக்கிறார். பிறகு சிரித்தவாரே

சொன்னது இங்கே...

".... ம், காதல்ங்கறது புரிந்த புதிர்... ம்.. இப்படி சொல்லலாம். புரியாததற்கு

பெயர்தான் புதிர்
என்பது நம் அனைவருக்குமே புரிந்ததுதான், ஆனால் இது

புரிந்த புதிர், அதாவது புதிர் என்பதே புரியாததுதான் என்று புரிந்த புதிர். நான்

இன்னொன்றும் சொல்வேன்...

[இதற்கு மேல் தாக்குபிடிக்க முடியாத நமது நிருபர் தெறித்து ஓடுகிறார்]
_______________________________________________________________________________________________________________

கட்சி வேலையில் பரபரப்பாக இருக்கும் கேப்டன் விஜயகாந்தை தொடர்பு கொண்டோம்.

"நானே பிரஸ் மீட்டுக்கு ஏதாவது காரணம் கிடைக்காதான்னு இருந்தேன்..

சரி சரி மத்த பேப்பர்காரங்களையும் கூட்டிக்கிட்டு ஆண்டாள் அழகர்

மண்டபத்திற்கு
வந்திடுங்க." என்றார்.


மாலை 4 மணி, நிருபர்கள் புடைசூழ நின்றிருந்த கேப்டன் விஜயகாந்திடம்

கேட்டே விட்டோம். முன்பே தயாராக வந்தவராக எடுத்து விட்டார்..

"தமிழ் நாட்டுல மொத்தம் 63426 பேர் காதலிக்கிறாங்க, அதுல 31713 பேர்

ஆண்கள், அதே 31713 பேர் பெண்கள் (!!??). நான் இவங்களுக்கெல்லாம்

ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன், என் கட்சியில 'காதலர் அணி' இருக்கு

அதுல வந்து சேர்ந்துடுங்க... பிரச்சனய பெரிசாக்கி

அப்புறம் சுமுகமா தீர்த்து வச்சிடறேன்...."
________________________________________________________________________________________________________________

நம்ம விஜய டி.ராஜேந்தரின் பதிலில்லாத ஒரு பேட்டியா? தி.நகரிலிருக்கும்

அவரது வீட்டில் போய் நின்றோம். எப்போதும் உணர்ச்சிவசப்பட்ட

நிலையிலேயே இருக்கும் அவர் தனது வழக்கமான பாணியில் கூறியது..


"ஏய்.... நான் சொல்றேன்டா...

காதலிங்கறவ, கண்ணாடி மாதிரி..

கண்ணுக்கு வெளியில வெச்சு பாதுகாக்கணும்....

ஆனா, மனைவிங்கறவ, காண்டாக்ட் லென்சு மாதிரி

கண்ணுக்குள்ள வெச்சு பாதுகாக்கணும்."


(திடீரென்று சோகமானவராக...)

ஏய், நானும் காதலிச்சவந்தான்டா...

ஆனா, கடைசியிலதான் தெரிஞ்சிச்சு....

கண்ணாடி எப்பவும் காண்டாக்ட் லென்சு ஆவாதுன்னு...


(திடீரென்று உச்சஸ்தாதியில் பாட ஆரம்பிக்கிறார்...)

"அட பொன்னான மனசே பூவான மனசே...

வக்காத பொண்ணு மேல ஆச...

அட வக்காத பொண்ணு மேல ஆச...
.......
நீ ஆச வச்ச பச்சகிளியோ.....

(நாம் இடத்தை காலி செய்த பிறகும் அவரது குரல் தூரத்தில்

கேட்டுக்கொண்டே இருந்தது)
________________________________________________________________________________________________________________

அந்நியன் விக்ரமிடம் பேட்டி வாங்க ஆசைதான் ஆனால் அவர் இன்னும்

எம்பிடி(MPD)யிலிருந்து மீண்டாரா என ஒருபுறம் பயமாகவேயிருந்தது.

அதனால், அவரை பின் தொடர்ந்து நோட்டமிட முடிவு செய்தோம். என்ன

ஆச்சர்யம் அவர் இன்னும் விடுபடவேயில்லை!


அம்பியாக : காதல் தோல்வியை தாங்க முடியாத அம்பி விறு விறுவென

வீட்டிற்கில் நுழைந்து தண்ணீரை மொண்டு குளித்துக்கொண்டே புலம்புகிறார்..


"ஏன் தான் இந்த பொண்ணுங்கள்லாம் இப்படி பண்றாளோ தெரியல..

பேசும் போது நன்னா அம்பி அம்பின்னு வழியறா...

காதல்ன்னு நெனச்சு சொன்னாக்க அண்ணான்றா...

இவாளுக்கெல்லாம் என்ன தண்டனயோ தெரியல..."


(தூள் சொர்ணாக்கா ஸ்டைலில் ஒரு குரல்..)

"எவன்டா அவன், நான் கஷ்டப்பட்டு தண்ணி லாரில புடிச்ச தண்ணிய மோண்டு மோண்டு குளிக்கறது..."

"அய்யய்யோ பார்த்துட்டேளா......!!" - அம்பி எஸ்கேப்

ரெமோவாக: லேட்டஸ்ட் பைக்கில் ஸ்டைலாக வந்திறங்கிய ரெமோவிடம் நண்பன்..
"என்னடா ரெமோ ஒன்ன உன் ஆளு அண்ணான்னுட்டளாமே..."

"ஹாய் கைஸ்.. ஹவார்யூ மேன்...

டேய் காடல்ங்கறது (காதல்தான்) எக்ஸாம் மாதிரி யூ நோ.. எழுத

பயப்படவும் கூடாது, பெயிலாயிட்டா வருத்தப்படவும் கூடாது... கே...!"


அந்நியனாக: இருள் கம்மும், ஆள் அரவமற்ற மெரீனா பீச்.... தனது டிரேட்

மார்க் கெட்டப்புடன் அந்நியன் என்டராகிறான். ஒரு இளம் காதல்

ஜோடியிடம் ஸ்லோ மோஷனில் நெருங்கி.. காதலனது சட்டையப்பிடித்து

கேட்கிறான்...


"டேய், காதலிச்சா தப்பா....?"

"தப்பில்லீங்க.."

"அஞ்சு பேர காதலிச்சா தப்பா....?"

"பெரிய தப்பில்லீங்க.."

"அட் எ டயத்துல அஞ்சு பேர காதலிச்சா தப்பா....?"

"ரொம்ப பெரிய தப்பில்லீங்க....."


(கோபமா, அழுகையா என வகைப்படுத்த முடியாததொரு குரலில்....)

"டேய், அதுல ஒண்ணு என் ஆளுடா......."


அடித்து துவைத்து கருட புராணத்தில் சொல்லப்பட்ட 'கல்யாண போஜனம்'

தண்டனயை தந்துவிட்டு.... தனியே ஒஊ ஓஊஊ என தீம் ம்யூசிக்கை

பாடிக்கொண்டே(!) இருட்டில் மறைகிறான்.

- சரவணன.K 

பிடித்தது

எனக்கு உன்னுள் பிடித்தது

உந்தன் சிரிப்பு

மனதைக் கொள்ளையடிக்கும்

உந்தன் பார்வை

உனக்கு என்னுள் பிடித்ததென்ன?

மனமா, குணமா? - அவன்

பணம் என்றாள் அவள்

வசந்த காலம்


இளவேனிற் காலம்
இதமான தாளம்
இதயமோ இனிக்கின்ற கோலம்

களவேது மின்றி
கருமிருள் குன்றி
காதலில் வாழ்வுற்றார் ஒன்றி

நிலமகள் பாட
அலைமகள் தேட
நிலவுடன் கூடிவிளை யாட

அழகான நாடு
அதிலொரு வீடு
அமைதி வாழ்வின்பத் தோடு

புத்தகம் படி


புத்தகம் படி
.
.
.
யாரிட்ட கட்டளை
.
.
ஆசிரியர் தவிர.
.
.
எந்த புத்தகமாவது.
------------------------------------------------------


உலகம் பெரிது
.
அனுபவம் பலவிதம்
.
.
அனுபவி அனுபவி
.
.
.
எந்த தந்தையராவது.

இதுவும் ஒரு வகையில் தேடல் தானே!


எனக்குப் புரியவில்லை

எங்கோ போகிறேன்

எதையோ தேடுகிறேன்

யாரையோ பார்க்கிறேன்

ஏதேதோ பேசுகிறேன்

ஏன் எதற்க்காக...



எந்தக் கடையில் தேடியும்

எவ்வளவு காசு கொடுத்தும்

கிடைப்பதில்லை...

சோகம்



கேட்டது


எதுவும்


கிட்டவில்லை....
.
.
.
.
.
.
.
மரணம் உட்பட..

மிக கொடியது

மிக கொடியது


கொடியது எது?

கற்றல்.

அதனினும் மிக கொடியது?

ஆண்டுக் கணக்கில்

வேலை வாய்ப்பு அலுவலகத்தில்

நிற்றல்.

கனவு மெய்ப்பட வேண்டும்


இடி விழுந்தாலும் இடியாத மனம் வேண்டும்.

எதிரியையும் நேசிக்கும் இதயம் வேண்டும்.

நல்லதே நடக்குமென்ற நம்பிக்கை வேண்டும்.

நினைத்ததை நடத்தியே
தீர்வதென்ற உறுதி வேண்டும்.

எல்லாமும் எனக்கென்ற எண்ணம் நீங்கி
'எல்லார்க்கும் எல்லாமும்'
எனும் எண்ணம் ஓங்க வேண்டும்.

'முடியாது' என்ற சொல்
விடை பெற்று ஓட வேண்டும்.

முயலாத பேர்களுக்கு இடமில்லை
மண்ணகத்தில் என்று விதி
இயற்றல் வேண்டும்.

கூராக வேண்டும் சிந்தனை.

நேராக வேண்டும் பார்வை.

யாராண்டால் என்ன எனும்
அலட்சியம் இனியேனும்
நமைவிட்டு அகல வேண்டும்.

தமிழ் மீது என்றென்றும்
சரியாத காதல் வேண்டும்.

தேசத்தின் பால் தணியாத
பாசம் வேண்டும்.

சாதி மதப் பிரிவினைகள்
நிரந்தரமாய் ஒழிய வேண்டும்.

மண்ணெல்லாம் மழை
கொட்ட வேண்டும்.

ஆறெல்லாம் கரை புரண்டு
ஓட வேண்டும்.

வயலெல்லாம் செந்நெல்லாய்ச்
சிரிக்க வேண்டும்.

வயிறெல்லாம் பசியாறிக்
குளிர வேண்டும்.

வாங்க.. வந்து பார்த்து எதாவது சொல்லிட்டு போங்க!

ஒரு வேலை கிடைத்தால் தேவலை!



எப்படி இருந்த நான் எப்படி ஆகிட்டேன்!

. .இன்னும் எழுதுவேன். .


சின்ன சின்ன வாக்கியங்கள்..
சொல்லிய பல கதைகள்..

முகமில்லா வரிகள்..
தந்தன பல விலாசங்கள்..

பதிந்தோர் உண்டு..
பாதித்தோரும் உண்டு..

பதிவிற்கு பதிலுண்டு..
பதிலாக பதிவும் கண்டு..

நானும் முயல்வேன்..
இன்னும் எழுதுவேன்..

முதன் முதலாய்....


இது என் முதல் பதிவு.


கவிதைகள், எழுத்துக்கள் படிக்க பிடிக்கும்.

எழுத முடியுமா...... என்பது கேள்விக்குறி!!!


முதல் அனுபவம்.

கை நடுங்க, மனம் பதபதைக்க... ஆரம்பிக்கிறது

இந்த முதல் அனுபவம்.


தவறுகள்,பிழைகள் மன்னிக்க வேண்டி, தங்கள்

கருத்துக்களையும் விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ள

கேட்டுக் கொள்கிறேன்.