Have a Nice Day

Enjoy

பொன்னியின் செல்வனாக விக்ரம்! வந்தியத் தேவனாக விஜய்..


பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்குகிறார் என்பது


நூறு சதவீதம் உறுதியான விஷயமாகிவிட்டது.

பொன்னியின் செல்வன் எனப்படும் ராஜ ராஜ சோழன் பாத்திரத்தில் விக்ரம் 


நடிக்கிறார். இந்த படத்தின் முக்கிய பாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார்.


விஜய்தான் படத்தின் ஹீரோ. பொன்னியின் செல்வன் நாவலில் 


வாசகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட 


வந்தியத் தேவன் பாத்திரத்தில் நடிக்கப் போகிறார் அவர்.
மகேஷ்பாபு நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 
சம்பந்தப்பட்ட கலைஞர்கள் அனைவருமே மணிரத்னத்தின் இந்தப் 


படத்தில் தாங்கள் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் என்பது 


குறிப்பிடத்தக்கது.



யாரும் எதிர்ப்பார்க்காத முக்கிய வேடத்தில் விஷால் நடிக்கிறாராம். 


அநேகமாக அது ஆதித்த கரிகாலன் வேடமாக இருக்கும் என்கிறார்கள்.


இந்தப் படத்தில் நாயகர்களுக்கு இணையாக நாயகிகளுக்கும் பங்குள்ளது. 


எனவே பொருத்தமான நடிகைகளுக்கு தேர்வு நடந்து வருகிறது.


படத்துக்கான திரைக்கதை அமைப்பு வேலைகள் கிட்டத்தட்ட 


முடிந்துவிட்டன.  படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என முதலில்


 செய்திகள் வந்தன.  இப்போது, பிக் பிக்சர்ஸ் அந்த இடத்துக்கு 


வந்திருக்கிறார்கள்.  மணிரத்னத்தின் ராவணன் படம் தயாரித்து 


நஷ்டப்பட்டவர்கள்  பிக் பிக்சர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment