Have a Nice Day

Enjoy

தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. 

வரிசையாய்  விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே 

தீபாவளி ஆகும். 


தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து 

அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில 

இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற 

எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை 

எரித்துவிட வேண்டும்.





தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் 

மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும்

 சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க்

குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் 

மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை 

உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.


பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே 

பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர்.

அன்று அநேக பெண்கள் புடவையும்வேட்டியும் உடுப்பர். தீபாவளி 

அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் 

ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் 

பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி 

வாழ்த்து பெறுவர்.
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று 

சொல்வதற்கு  காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா 

இடங்களிலும்,  தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் 

அரப்பில்  சரஸ்வதியும், குங்குமத்தில்கௌரியும், சந்தனத்தில் 

பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும்"கங்கா ஸ்நானம் 

ஆச்சா" என்று  ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம்,

எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் 

"கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் 

இந்துப் பண்டிகையாய்  இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி 

அனைவரும் ஒற்றுமையாய்  கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

0 comments:

Post a Comment