Have a Nice Day

Enjoy

கவிதை சொல்லவில்லை

பெரிதாக ஒன்றும்
 
சொன்னதில்லை
 
கவிதையில்
 
ஆனாலும்
 
கவிதைகள் எப்போதும்
 
என்னைப் பார்த்ததில்லை
 
சிறுமையாய்





மனிதனைத்
 
திறக்கும் சொல் ஒன்று
 
காலங்காலமாய்
 
பூட்டியே கிடக்கிறது
 
தன்னைத்
 
திறந்து கொள்ளத் தெரியாமல்! ! !

அனுபவ கவிதை

என் ஊனம் பெறும்

ஒரு நாள் ஞானம்

அதுவரை இது

யாத்திரை காலம்! ! !



சொல்லெடுத்து
 
தரும் சொல்
 
சொல்வதில்லை
 
சொல்லென்று! ! !





அறைக்கு வந்த குழந்தை

அள்ளிப் போகிறது

இருளை! ! !



  
சந்திக்கும் போதெல்லாம்
 

முடிவுக்கு வருகிறது
 

பிரிவு  ! ! !

தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோயில்


இது ஒரே நேரத்தில் கட்டப்பட்ட கோயில் அல்ல. 10 ஆம் நூற்றாண்டிலேயே

இதன் சில பகுதிகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டி முதலி 

அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். 

பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக்

கோயிலைப்  புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர்.

வணங்காமுடி  மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக்

கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி 306 அடி

அளவுக்கு  மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது 13 ஆம்

நூற்றாண்டில்  கட்டப்பட்டது. ஆலயத்தின் ராஜகோபுரம் 90 அடி உயரத்தில்

ஐந்து அடுக்குகளைக் கொண்டது. ஒரு பெரிய தேரைக் குதிரைகளும்

யானைகளும்  இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றத்தில் இந்தக்

கோபுரம் அமைந்துள்ளது. 

இந்தக் கோயிலில் ஆகஸ்டு-செப்டம்பர் மற்றும் பிப்ரவரி மார்ச்


மாதங்களில்  நுழைவு வாயில் கோபுரத்தின் வழியாக மாலை நேர


வெயில் நுழைந்து  கருவறையில் இருக்கும் சிவகாமி சமேதராக


வீற்றிருக்கும் கைலாசநாதர்  சிலை மீது விழும்.
சிறப்புகள் :மாசி 9,10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு

வழியே  சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது.

இதைக்காண  அன்றைய தேதிகளில் கோயிலில் பக்தர்கள் வெள்ளம் அலை

மோதும். ரதி  சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியும் வகையிலும்,

மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் ரதி தெரியும்படியும் அமைந்த


சிற்பம் சிறப்பானது.இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம்

ஆகியவை  சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.எப்போதும் குளிர்ச்சியாக

இருக்கும்  பவளக்கல் பட்டியக்கல் நிலை கோயிலின் நுழைவாயிலில்

உள்ளது.பாதாள  லிங்கம் : இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி இது.

தலத்தின்   கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும்

இந்து பாதாள  லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய்க் கிழமை

தோறும்  அபிஷேகம் செய்தால் கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம்

மற்றும் தொழில்  விருத்தி ஆகியவை கை கூடுகின்றன. ஜூரகேஸ்வரர் :

இத்தலத்தில் உள்ள  ஜூரகேஸ்வரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது

சிறப்பு. இவருக்கு மிளகு ரசம்   வைத்து சாதம் படைத்து வடைமாலை

சாத்தி அபிஷேகம் செய்தால் காய்ச்சல் மற்றும் தீராத வியாதிகள் 

குணமடைகின்றன.

21 லட்சம் கார்களை திரும்பப் பெறும் நிஸ்ஸான்

எஞ்ஜின் கோளாறு காரணமாக 21 லட்சம் கார்களை திரும்பப் பெறுவதாக

அறிவித்துள்ளது நிஸ்ஸான் நிறுவனம்.


ஜப்பானின் முன்னணி கார் உற்பத்தியாளரான நிஸ்ஸான் உலகமெங்கும்

 தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவிலும் சென்னை 

உள்ளிட்ட மூன்று இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன.


ஆனால் இந்த நிறுவனத்தின் கார்களில் சர்வதேச அளவில்

ஆயிரக்கணக்கான புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன. 2003 முதல் 2006

வரை தயாரிக்கப்பட்ட நிஸ்ஸானின் க்யூப், மார்ச் மற்றும் டைடா ஆகிய

மாடல் கார்களில் தொடர்ந்து எஞ்ஜின் கோளாறு குறித்த புகார்கள்

வருவதாகவும், இது தொடர்பாக அந்தக் கார்களை திரும்பப் பெற

முடிவெடுத்திருப்பதாகவும் முன்பே கூறியிருந்தது.
அதன்படி, ஓடும்போதே, எஞ்ஜின் திடீரென்று நின்றுவிடுவதாக புகார்

கூறப்பட்ட 21 லட்சம் கார்களை உடனடியாகத் திரும்பப் பெறுகிறது.


இவை அனைத்தும் ஜப்பானில் விற்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

World's most Expensive car in India ! ! !

உலகிலேயே அதிக விலை கொண்ட சொகுசு கார் இந்தியாவுக்கு வருகிறது. 

காரின் பெயர் புகட்டி வேரோன் (Bugatti Veyron). விலை ரூ: 16 கோடி!!


மணிக்கு 407 கிமீ வேகத்தில் பறக்கும் இந்த கார், 2.7 வினாடிகளில் 100 கிமீ 

வேகத்துக்கு தாவிவிடும் சக்தி கொண்டது.


அதிக விலை கொண்ட சொகுசு கார்கள் இந்தியாவுக்கு புதிதல்ல.

ஏற்கெனவே  இங்கு ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லே மற்றும் மேபேக் போன்ற,

கோடிகளில் விலை கொண்ட சொகுசு கார்கள் புழக்கத்தில் உள்ளன.


அப்படியென்ன புகட்டியின் விசேஷம்?

 "புகட்டி வெறும் கார் மட்டுமல்ல... அது கார் வடிவமைப்பின் உச்சம். இந்தக் 

காரின் பெருமையை காப்பாற்ற மிகக் குறைந்த அளவு எண்ணிக்கையில் 

தான்  விற்பனைக்கு தருகிறோம்..." என்கிறார், ஐரோப்பா, மத்திய கிழக்கு

மற்றும் இந்தியாவுக்கான இந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேலாளர்

கய் காக்வெலின்.

இதன் மூலம், உலகின் மிகக் குறைந்த விலையான ரூ 1 லட்சம் மதிப்பு 

கொண்ட நானோ முதல், உலகின் அதிக விலையான ரூ 16 கோடி விலை 

கொண்ட புகட்டி வரை விதவிதமான கார்கள் விற்பனைக்குக் கிடைக்கும் 

சந்தை என்ற பெருமையை இப்போது இந்தியா பெறுகிறது.

தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. 

வரிசையாய்  விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே 

தீபாவளி ஆகும். 


தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து 

அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில 

இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற 

எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை 

எரித்துவிட வேண்டும்.





தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் 

மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும்

 சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க்

குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் 

மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை 

உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.


பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே 

பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர்.

அன்று அநேக பெண்கள் புடவையும்வேட்டியும் உடுப்பர். தீபாவளி 

அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் 

ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் 

பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி 

வாழ்த்து பெறுவர்.
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று 

சொல்வதற்கு  காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா 

இடங்களிலும்,  தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் 

அரப்பில்  சரஸ்வதியும், குங்குமத்தில்கௌரியும், சந்தனத்தில் 

பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும்"கங்கா ஸ்நானம் 

ஆச்சா" என்று  ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம்,

எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் 

"கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் 

இந்துப் பண்டிகையாய்  இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி 

அனைவரும் ஒற்றுமையாய்  கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

ஆயுத பூஜை

உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற 

இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் 

ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் 

பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனவும் சொல்லலாம்.

ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள்

வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் 

துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு 

வைத்து  பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு 

எடுத்து  தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் 

சிறப்பம்சமாகும்.


ஆயுத பூஜையன்று எல்லா ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு 

மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம்,

மற்ற அழிவு  செய்கைகளுக்கு பயன்படுத்தமாட்டோம் என்று உறுதி 

எடுத்துக் கொள்வோமே.



விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குவோர், கல்வி பயில 

ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் நன்று.


நமது பலம்

ஓரளவு வசதி படைத்த ஒருவர், தம்முடைய வீட்டை விற்று விட்டு 

அதை விட வசதியான ஒரு வீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்று

நினைத்தார். உடனே தரகரிடம் சென்று வீட்டை விற்றுத் தருமாறு

 கேட்டார். உடனே தரகர், "நானே பத்திரிகையில விளம்பரம் செய்து


வித்துத் தரேன் சார்" என்று கூறியதுடன், அழகிய வாசகங்களுடன்


பத்திரிகையில் விளம்பரம் செய்தார். அடுத்தநாள் தரகர் சுமார் பத்து

முறை வெவ்வேறு ஆட்களை அழைத்து வந்து வீட்டை சுற்றிக்

காட்டினார். வீட்டின் சொந்தக் காரருக்கு ஆச்சரியம். உடனே

 பத்திரிகையில் வெளியான விளம்பரத்தைப் பார்த்தார்.
`
அதில் குறிப்பிட்டிருந்த தன் வீட்டின் வசதிகளைப் பார்த்த அவர், 

"அடடா, நம்ம வீட்டுலயும், வீட்டைச் சுத்தியும் இவ்ளோ வசதிகள்


இருக்கா...இப்பத்தானே வீட்டோட அருமை தெரியுது" என்று

ஆச்சரியப்பட்டு, உடனே தரகரிடம் சென்றார். 

`
"வீட்டை விக்கற யோசனையை நான் கைவிட்டுட்டேன். இனி


எப்போதும் விக்கறதா இல்லை. மன்னிச்சுடுங்க" என்று சொல்லி

விட்டு வந்தார்.
`

இன்றைக்கு நம்மில் பலரும் இதே மனநிலையில் தான் இருந்து 

கொண்டிருக்கிறோம். நமது பலம் என்ன என்பது நமக்கே

தெரியவில்லை. பலவீனங்களையே நமது மனம் அதிகமாக படம்


பிடித்துக் காட்டுகிறது. அதன் காரணமாகவே வாழ்க்கையில்

சோர்ந்து போகிறோம். அறிவின் வெளிச்சத்தில் நடைபோடுகிறபோது,


இப்படிப்பட்ட சிக்கல்கள் ஏதும் ஏற்படுவதில்லை.
 `

நீதி : பலவீனங்களை மட்டும் பார்க்கலாம். நமது பலம் என்ன என்று


தெரிந்து கொள்ள வேண்டும். பலவீனங்களை சரி படுத்த முயற்சிக்க


வேண்டும்....


எந்திரன் டிப்ஸ்



1.பிரபல ஹாலிவுட் ஸ்டேன் விஸ்டம் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட 

முதல் இந்திய படம் எந்திரன்!

 

2.எந்திரன் படத்தில் மொத்தம் 22 காட்சிகள் அனிமேஷன்

செய்யப்பட்டுள்ளது.

 

3.எந்திரன் படத்தின் டெக்னிஷியங்களை தேர்ந்தெடுக்க ஒன்றை வருடம் 

எடுத்துக் கொண்டார் ஷங்கர்!

 

4.எந்திரன் படத்தில் 200 சிஜி ஷாட்கள் எடுக்கப்பட்டுள்ளன.

 

5.எந்திரன் படத்திற்கு மறைந்த எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதியுள்ளார்.
6.பாடத்தின் பாடல் காட்சிகள் இதுவரை யாரும் படம் பிடிக்காத நாடுகளான 

பிரேசில், ஆஸ்திரியா, பெரு போன்ற நாடுகளில் படமாக்கப்பட்டது.

 

7.ஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிரக் எடிட்டிங் செய்துள்ளார்.

 

8.எந்திரன் படம் சுமார் 873 நாட்களில் முடிக்கப்பட்டது.

 

9.படப்பிடிப்பின் இறுதிநாளில் எந்திரன் டீம்முக்கு சன் பிக்சர்ஸ் கலாநிதி 

மாறன் அவர்கள் விருந்து அளித்தார்.

 

10.படத்தின் ஆடியோ வெளியீட்டு உரிமையை திங் மியூசிக் நிறுவனம் 

வாங்கியுள்ளது.

11.புதிய மனிதா’ பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஏ.ஆர்.ரகுமான்


ஏ.ஆர்.ரகுமான்மகள் கதீஜா இணைந்து பாடியுள்ளனர்.


12.இந்தப் படத்தில் முதல்முறையாக கிளிமஞ்சாரோ என்ற பழங்குடியின 

பாட்டு இடம்பெற்றிருக்கிறது. எந்திரத்துக்கு காதல் வந்தால் எப்படி 

இருக்கும் என்பதற்கு டியூன் அமைத்து கலக்கியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

 
12.மேக்-அப் போடுவதற்கு மட்டும் 6 மணிநேரம் பொறுமையாக

காத்திருந்தார் ரஜினி.

 

14.'எந்திரன்', இந்தியில் 'ரோபோ' என்ற பெயரில் ரிலீசாகிறது. 

எந்திரன் - பட விமர்சனம் ! ! !

நடிப்பு                         : ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், டேனி,

                                          சந்தானம், கருணாஸ்.

சவுண்ட் மிக்சிங் :  ரசூல் பூக்குட்டி

இசை                          :  ஏ.ஆர்.ரகுமான்

எடிட்டிங்                    :  அந்தோனி

ஒளிப்பதிவு              :  ஆர்.ரத்னவேலு

பாடல்கள்               :  வைரமுத்து, பா.விஜய்

வசனம்                      :  சுஜாதா, பாலகுமாரன்

எழுத்து - இயக்கம் :  ஷங்கர்

தயாரிப்பு                    :  சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்

முதல் நாள் ஷூட்டிங்    :  15 Feb 2008

கடைசி நாள் ஷூட்டிங் :  7 July 2010

மொத்த நாட்கள்                 :  873 நாட்கள்

பாடல் வெளியீடு               :   jul 31 2010
எந்திரன்



வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம். இந்த 

சாதனைகளை முறியடிக்க இனியொரு படத்தை ரஜினியைத் தவிர 

வேறு யாராலும்  தரமுடியுமா என்ற கேள்விதான் இன்று 

கோடம்பாக்கத்தில்  பிரதானமாக  எழுந்து நிற்கிறது. டிக்கெட் 

விற்பனையில்தான் இந்தப் புதிய சாதனை.  சென்னை அபிராமி 

மெகா மாலில் 20 நிமிடங்களில் 8  நாட்களுக்கான  மொத்த 

டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. நான்கு மணி நேரத்தில் ரூ 50 

லட்சத்தை எந்திரன் வசூல் செய்திருப்பதாகவும், இது 

இந்தியத் திரையுலகில் முன்னெப்போதும் நிகழாத பெரும் சாதனை. 

தமிழகத்தின் மற்ற  திரையரங்குகளில் முன்பதிவு துவங்கிய ஒரு 

மணிநேரத்தில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன.

சுப்பிரமணிய பாரதி

சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921).

சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் பாரதியார் 

என்றும், மகாகவி என்றும்  அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர்

எழுத்தாளர்,  பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக 

சீர்திருத்தவாதி என  பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.



தேடிச் சோறுநிதந் தின்று  
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?


பாரதி - செல்லம்மா