Have a Nice Day

Enjoy

பொன்னியின் செல்வன்


200 கோடிசெலவில் கல்கியின் ‘பொன்னியின் செல்வனை’

 படமாக எடுக்கிறார் மணிரத்னம்!!!
  படித்தவர்களுக்காக மட்டுமே படமெடுப்பவர் என மனைவி சுகாசினியால்

பாராட்டப்பட்ட மணிரத்னம், இப்போது தமிழ் இலக்கியத்தின்

பெருமைகளுள் ஒன்றான பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்கும்

முயற்சியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ 200 கோடி

செலவில் உருவாகப் போகும் அவரது இந்தப் படத்துக்கு சன் டிவி நிதி

 உதவி அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

        மிகப் பெரிய, கற்றோரும் வியக்கும் அற்புதமான நாவல் அமரர்


கல்கியின் பொன்னியின் செல்வன். இதற்கு நிகரான இன்னொரு

 தமிழ் சரித்திர நாவல் இதுவரை எழுதப்பட்டதில்லை என்று புகழப்படும்

 அளவு பிரமாண்டமானது அதன் விஸ்தாரம். கல்கியின் நடையும்,

 சரித்திர நாயகர்களான வந்தியத் தேவன், ராஜ ராஜசோழன், குந்தவை

போன்றவர்களை மையப்படுத்தி, வரலாற்று உண்மைகளை கொஞ்சமும்

மறைக்காமல் அவர் கதை புனைந்திருந்த விதமும் படிப்பவரை வேறு

உலகத்துக்கு இட்டுச் சென்றது.

   இந்த நாவலை படமாக்க அமரர் எம்ஜிஆர் முயன்றார். இயக்குநர்


மகேந்திரன் இதற்கான திரைக்கதையை எழுதினார். ஆனால் எம்ஜிஆர்


அதற்குள் முதல்வர் பதவிக்கு வந்துவிட்டதால் திட்டம் நிறைவேறாமல்


போய்விட்டது.

      பின்னர் கமல்ஹாஸன் இந்தக் கதையை படமாக்கப் போவதாகக் கூறி

வந்தார். ஆனால் அதுகுறித்த முயற்சி எதையும் மேற்கொண்டதாகத்

தெரியவில்லை. இதற்கிடையே ரஜினி – கமலை வைத்து இந்தக் கதையை

 சன் டிவி படமாக்கப் போவதாக செய்திகள் வந்தன. ஆனால் அதிலும்

உண்மையில்லை என்றானது.

        இப்போது, பொன்னியின் செல்வனை படமாக்க மணிரத்னம்


திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப்படத்தின் வசனத்தை


 எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார்.


 நடிகர் நடிகர்கள் இன்னும் முடிவாகவில்லை என்கிறார்கள்.

   இந்தப் படத்துக்கு சன் பிக்சர்ஸ் நிதி

 உதவி செய்யும் என்று செய்திகள்

 கசிந்துள்ளன. ஆனால் இதுகுறித்து

 கருத்து தெரிவிக்க சன் பிக்சர்ஸ்

மறுத்துவிட்டது. மணிரத்னம்

தரப்பிலும் மவுனம்

சாதிக்கப்படுகிறது. அதேநேரம், தன்

படங்கள் குறித்து கடைசி நிமிடம்

வரை எந்த செய்தியையும் தாராமல்

வைத்திருப்பது மணிரத்னம் ஸ்டைல்

என்பதால் இந்த செய்தியை நம்புவதா

 வேண்டாமா என்ற குழப்பத்துடனே

செய்திகளை வெளியிட்டுள்ளன

பத்திரிகை / இணையதளங்களும்.

இளையராஜாவுடன் கைகோர்க்கிறார்?
இந்தப் படம் குறித்து இன்று சிஃபி இணையதளம் வெளியிட்டுள்ள


செய்தியில், பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்னத்துடன்


மீண்டும் இசைஞானி இளையராஜா இணைகிறார் என்று


குறிப்பிட்டுள்ளது. ரஜினியின் தளபதிதான் படம்தான் இருவரும்


இணைந்த கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் இதுவரை எடுத்த படங்களில் பெரும்பாலானவை


இந்திய / தமிழ் காப்பியங்களின் கதைகளின் அடிப்படையில்


அமைந்தவையே. தளபதி மகாபாரதத்தையும், ரோஜா சத்யவான்


சாவித்ரி கதையையும், ராவணன் ராமாயணத்தையும் தழுவி


எடுக்கப்பட்டன. இவற்றில் ராவணன் தோல்வியைத் தழுவியது


குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment