Have a Nice Day

Enjoy

என் பயணத்தில் ஒரு நாள் . . . .

அந்த வண்ணத்துப் பூச்சி

நான் பயணித்த

இரவுப் பேருந்தில் மெல்லிய

இறக்கைகளை

அசைத்த வண்ணம்

பறந்து கொண்டிருந்தது.

பறந்து பறந்து

சலித்தது போல்,

யாருடைய சட்டையிலோ

அல்லது

சேலையிலோ

ஒட்டிக்கொண்டது...

அதை  நான்

மறந்திருந்த பொழுது

மீண்டும்

பறக்க ஆரம்பித்தது.

அம்மா மடியில் இருந்த

சின்னக் குழந்தை

கையை நீட்டிப்

பிடிக்க முயன்று

தோற்று

அழுதது.

இடையில் நான்

இறங்கிக் கொண்டாலும்

அந்த வண்ணத்துப் பூச்சி

என்னவாகியிருக்குமோவென

சின்னக்கேள்வி(?)

மனதில்

ஒரு பெரிய

சுமையாய்.........

யாருடைய

பூட்ஸ் காலிலும்

நசுங்காமல்  இருந்தால் போதும்! 

- சரவணன.K

0 comments:

Post a Comment